அமெரிக்காவில் எலிகள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது சிக்காகோ.அட்லான்டாவின் ஓர்கின் என்கிற (ஓர்கின்) பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனம், "புதிய எலியொழிப்பு நடவடிக்கை" அடிப்படையில், ஆண்டுதோறும் அமெரிக்க நகரங்களைப் பட்டியலிடும்.

அதில் உள்ள 50 நகரங்கள் அடிக்கடி இடம் மாறினாலும், முதல் நிலையிலிருந்து சிக்காகோவை அசைக்க முடியவில்லை.உணவையும், உறைவிடத்தை்தையும் அடைவதில் எலிகளுக்குப் பிடிவாதம் அதிகம் என்று ஓர்கின் நிறுவனம் குறிப்பிட்டது.

தொல்லை தாங்க முடியாமல், 2016இல், எலிகளை ஒழித்துக் கட்ட சிக்காகோவில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. நகரவாசிகளும் பூனைகளைத் தத்தெடுக்கத் தொடங்கினர்.குளிர்காலத்தில், எலிகளின் அட்டகாசம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.