அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்தவர் லிசா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கிட்மோர் நகரில் வசித்து வந்த 23 வயதான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் கத்தியால், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருப்பையில் இருந்த குழந்தையை எடுத்துச் சென்றார். இந்த வழக்கில் கடந்த 2007-ம் ஆண்டு லிசாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையின்போது, குழந்தை இல்லாத லிசா, ஸ்டின்னெட்டியின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்து, தன்னுடையதாகக் காட்டிக் கொள்ள முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

சுயநினைவில்லாத நிலையில் அதனை லிசா செய்ததாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார். அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், லிசா குற்றவாளி என்று அறிவித்து அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.