பிரிட்டன் கொவன்ரியில் உள்ள கற்பக விநாயகர் ஆலய ஐயா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் பெயர் தீபன் ஐயா என்று அறியப்படுகிறது. மேலும் இவர் சில சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கோபி ஐயாவின் அண்ணா. கோபி ஐயா அவர்கள் லூசிஹாம் சிவன் கோவிலில், வெளியே உள்ள மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காதல் முறிவே காரணம் என்று கூறப்பட்டாது.

இதேவேளை அவர் அண்ணா தற்கொலை செய்து கொள்ள குடும்பப் பிரச்சனையே காரணம் என்று கூறப்படுகிறது. கடும் மது பழக்கத்திற்கு அடிமையாகிய தீபன் ஐயா, தனது மனைவியை தாக்கிய நிலையில். கவுன்சில் ஆட்கள் வந்து அவரது பிள்ளையை கொண்டு சென்றுவிட்டார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகியே அவர் தற்கொலை செய்து கொண்டதாக மேலும் அறியப்படுகிறது.

இவர் சுமார் 1 வருடத்திற்கு முன்னர் , கொவன்ரி கற்பக விநாயகர் ஆலயத்தில் வேலை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.