tamilskynews.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொழும்பு விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் பாரிய குண்டுவெடிப்பு -இரு விமானப்படையினர் பலி 32 பேர் காயம் -காவற்துறைப் பேச்சாளர்

E-mail Print PDF
கொம்பனித்தெருவிலுள்ள விமானப்படைத் தலைமையகம் முன்பாக தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இத் தற்கொலை குண்டு தாக்குதலில் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை குண்டுதாரி விமானப்படை தலைமையகத்தினுள் நுழைய முற்பட்ட வேளை குண்டுதாரி குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
Last Updated on Friday, 02 January 2009 12:58 Read more...
 

கிளிநொச்சி நகருக்குள் இராணுவம்

E-mail Print PDF
கிளிநொச்சி நகரை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில் கிளிநொச்சி நகர மத்திக்குள் நுழைந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.  கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ரயில் நிலையப் பகுதியை இராணுவத்தினரின் 57வது படையணி கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Last Updated on Friday, 02 January 2009 09:18 Read more...
 

ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்கவில்லை: அநுர பிரியதர்ஷன யாப்பா

E-mail Print PDF

ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துக்கொண்டதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லையென அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இணையத்தளமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். 

புதிதாக வழங்கப்பட்டிருக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்அபிவிருத்;தி அமைச்சுடன்,
Read more...
 

"மிட்டாய்' காட்டி புத்தாண்டில் வாக்குக் கொள்ளைக்கு தயாராகிறது அரசு

E-mail Print PDF

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் அரசாங்கம் 2009 ஆம் வருடத்திலும் நாட்டு மக்களை ஏமாற்றிவிட முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிட்டாய்களை காட்டி பிறக்கும் புதிய வருடத்தில் வாக்குக் கொள்ளையொன்றுக்கு அரசு தயாராகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சியின் பக்கம் மக்கள் அணிதிரள்வதைக் கண்டு அரசு அச்சம் கொண்ட நிலையிலேயே திடீரென மக்களை கனவுலகுக்கு

Read more...
 

மட்டக்களப்பில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உறக்கத்திலிருந்த 6 மாத குழந்தை படுகாயம்

E-mail Print PDF
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் மகிழூர் இராணுவ முகாமிலிருந்து படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த 6 மாதக் குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ளது. 

இச்சம்பவம் புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Read more...
 

கரடிப்போக்கும் படையினர் வசம்

E-mail Print PDF

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், இரணைமடுச் சந்தி மற்றும் கரடிப்போக்குச் சந்தி ஆகியவற்றைப் படையினர் கைப்பற்றியிருப்பதால்,

கிளிநொச்சி நகருக்கான பெரும்பாலான போக்குவரத்து மார்க்கங்கள் அடைபட்டு அது முற்றுகைக்குள்ளாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

Read more...
 

புத்தாண்டை கொண்டாடுகிறது உலகு இலங்கைத் தமிழரோ கந்தகப் புகைக்குள்

E-mail Print PDF

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில், இலங்கைத் தமிழர்கள் கந்தகப்புகைக்குஇடையில் பெருந்துயரத்தை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ள யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.கே.சிவாஜிலிங்கம் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read more...
 

நேட்டோ படையினரைவிட இலங்கைப் படையினர் திறமையானவர்கள் - சம்பிக்க ரணவக்க

E-mail Print PDF
ஐக்கிய நாடுகளின் நேட்டோ அமைதி காக்கும் படையினரைவட இலங்கைப் படையினர் திறமையானவர்கள் என சுற்றாடல் அமைச்சர் பாதலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
 
சூடானிலும், ஆப்கானிஸ்தானிலும் நேட்டோ படையினரினால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு நிகரான சேவையை இலங்கை அரச படையினர் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read more...
 

இஸ்ரேலிய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு இலங்கைக்கு என்ன அருகதை இருக்கின்றது - தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி

E-mail Print PDF

தனது சொந்த நாட்டின் மக்களின் மீதே விமான குண்டு வீச்சுகளை நடத்திக்கொண்டிருக்கும் அரசாங்கம் பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தின் மீது கடந்த சில நாட்களாக நடத்தி வந்திருக்கும் விமானக் குண்டு வீச்சுக்களை கடுமையாக கண்டித்திருக்கின்றது.

இந்நிலையில் இஸ்ரேலிய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு என்ன அருகதை இருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா கேள்வி எழுப்பினார்.

Read more...
 

புலிகளை அழிக்கும் போருக்கு ஆயுத உதவிகளைப் பாகிஸ்தானும் ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்குகின்றன: கொழும்பு வார ஏடு

E-mail Print PDF

சிறிலங்கா அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்கு தேவையான

ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை பாகிஸ்தானும் இந்தப் போருக்குத் தேவையான ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்கி வருகின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது.

Read more...
 

புலிகளைத் தடைசெய்தால் பேச்சுவார்த்தை சிக்கலாகும்: அமெரிக்கத் தூதுவர்

E-mail Print PDF

விடுதலைப் புலிகள் இலங்கையில் தடைசெய்யப்பட்டால் அது சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறியுள்ளார். 

விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் முழுமையாகத் தோற்கடிப்பது சாத்தியமற்றது என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கத் தூதுவர்,
Read more...
 

சம்மாந்துறை வீரமுனைச் சந்தியில் குண்டு வெடிப்பு: காவற்துறை மற்றும் ஊர்காவல் படைச் சிப்பாய் இருவர் மரணம்

E-mail Print PDF

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு காவற்துறைச் சிப்பாய் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு சிப்பாய் ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறைக் காவல் நிலையத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வீரமுனைச் சந்தியில் காலை 8.30 அளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 

 

பரந்தனை இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டனராம்: பாதுகாப்பு அமைச்சு

E-mail Print PDF

பரந்தனை இராணுவத்தின் விசேட படையணி-1 இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

விடுதலைப் புலிகளுடன் நடந்த கடுமையான மோதல்களின் பின்னர் பரந்தனைக் கைப்பற்றியிருப்பதாகவும், பரந்தன் நகரைக் கைப்பற்றுவதற்கான கடும் மோதல்கள் செவ்வாய்க்கிழமை காலையில் ஆரம்பமானதாவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Last Updated on Thursday, 01 January 2009 06:03 Read more...
 

டயலொக் ஜி.எஸ்.எம் தொலைபேசி வலையமைப்பு ஊடாக குறுஞ்செய்தி மூலம் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு

E-mail Print PDF

டயலொக் ஜி.எஸ்.எம் பாவனையாளர்களாகவுள்ள  மத்திய கிழக்கு நாடுகளான துபாய், அபுதாபி,சார்ஜா,கட்டார் போன்ற நாடுகளில் தொழில் புரிந்து வரும் இளைஞர் யுவதிகளின் ஜி.எஸ்.எம் ரோமிங் தொலைபேசிகளுக்கு  குறுஞ்செய்தி மூலமாக இராணுவத்தில் சேரும்படியான ஆட்சேர்ப்பு முயற்சியினை  சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக தெரியவந்துள்ளது.

Last Updated on Thursday, 01 January 2009 05:19 Read more...
 

பிரபாகரனைக் கைதுசெய்வோம் என்பது அரசின் தேர்தல் பிரசாரத் தந்திரோபாயம் - மங்கள சமரவீர எம்.பி

E-mail Print PDF
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்களால் இதுவரையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகியுள்ளதுடன் 11 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஸ்தாபகரும் பாதுகாப்பு கண்காணிப்பகத்தின் தலைவருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பெப்ரவரி 7 ஆம் திகதிக்குள் கைது செய்வோம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பானது
Read more...
 

2008 ஆம் ஆண்டில் ஒரு நொடி கூடுதல்

E-mail Print PDF
2008 ஆம் ஆண்டு நிறைவாக முடிவுக்கு வரும் போது, இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட நீண்டு இருந்தது என்பதற்கு அறிவியல் ரீதியாக ஒரு பகுத்தறிவு விளக்கம் இருக்கிறது.

இந்த ஆண்டு நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதம் ஒரு முழுநாள் கூடுதலாக கிடைத்தது மட்டுமல்ல, இந்த ஆண்டு லீப் நொடி என்றழைக்கப்படும் ஒரு நொடியும் கூடுதலாக கிடைக்கப் போகிறது.

Read more...
   

வவுனியாவில் இராணுவ வண்டியில் தவறுதலாக கைக்குண்டு வெடித்து 11 படையினர் காயம்

E-mail Print PDF
வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் 14 படையினர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மாமடுவ வீதியில் நெடுங்குளத்திற்கும் கருவேல புளியங்குளத்திற்கும் இடையில்  படையினரின் யுனிகோன் வாகனத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 31 December 2008 15:55 Read more...
 

"நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்'

E-mail Print PDF
"நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்'

கிழக்கில் சாய்ந்தமருது கிராமத்தில் நவம்பர் 23 இல் எமது வெள்ளைநிற வான் நிறுத்தப்பட்டபோது அங்குள்ளோர் எம்மை அச்சத்துடன் பார்த்தனர். உள்ளூர் வாசியான எனது நண்பர் "அவர் சென்னையிலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளர்' என்று என்னை அறிமுகப்படுத்தினார் என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் "வீக்' சஞ்சிகையின் நிருபர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Read more...
 

பரந்தன், முரசுமோட்டையில் விமானத் தாக்குதல்: 4 பொதுமக்கள் பலி; 14 பேர் காயம்-(சிறுவர்.கற்பிணிகள் பார்க்கவேண்டாம்)

E-mail Print PDF

சிறிலங்கா விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை 8.00 மணியளவில் பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை முருகானந்தா பாடசாலை அருகில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. 

இதில் இரு குடும்பத்தினர், ஒரு குடும்ப தலைவர் உட்பட நால்வர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும்.... ஒரு குடும்பம் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று தருமபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Last Updated on Wednesday, 31 December 2008 13:15 Read more...
 
More Articles...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 76
http://farm4.static.flickr.com/3134/3143997758_985ca9fc06_o.gif

Login Form

வணக்கம்

Time Zone Clock


http://farm4.static.flickr.com/3078/3152735969_f2bf6551a1.jpg?v=0

Who's Online

We have 135 guests online

நாணய மாற்று

Convert 

into

  

 

அறிவித்தல்

இது  மக்களின் இணையம் கனடாவிலிருந்து இயங்குகிறது  எந்த அரசியல் சார்பு நிலையும் இங்கே கிடையாது   நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் செய்தியை அனுப்பலாம்  அதாவது தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்கள் citizen jornalist ஆக மாறுங்கள் உண்மைகளை உலகறியச்செய்வோம்    பிறந்த நாள் வாழ்த்து மரண அறிவித்தல் முக்கிய நிகழ்சிகள் என்பன‌ இலவசமாக இணைக்கப்படும் அனுப்பி வையுங்கள்.Kiss

மின் மடல் முகவரி:isoory86@tamilskynews.com


http://farm4.static.flickr.com/3228/3142991431_c666849bcf.jpg?v=0